குழந்தையை தூக்கிச் சென்று பாறையில் தலையை மோதி கொடூர கொலை! காதல் மயக்கத்தில் தாய் அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

கேரளாவில் பெற்ற குழந்தையை தாய் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் கண்ணூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பிரணவ் . இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சரண்யா என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி வியான் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினர் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது தங்களுடைய மகன் காணாமல் போனதாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். 

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலில் வழக்கின் விசாரணையை பெற்றோரிடமிருந்து போலீசார் துவங்கியுள்ளனர். அப்போது கணவன் மனைவி இருவரிடத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் இவர்கள் மீது சந்தேகம் அதிகரித்திருக்கிறது. விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரணவ் வீட்டின் அருகே உள்ள கடற்கரையில் ஓரத்தில் அவர்களது குழந்தையின் சடலம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. குழந்தையின் சடலம் கிடைத்தவுடன் போலீசாருக்கு மற்றும் சரண்யா ஆகியோர் மீது சந்தேகம் மேலும் அதிகரித்திருக்கிறது.

எஆகையால் போலீசார் சரண்யா மற்றும் பிரணவ் ஆகியோர் பயன்படுத்திய போர்வை தலையணை ஆகியவற்றை சோதனைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதாவது இருவரில் ஒருவர் கொலை செய்திருந்தால் அவர்கள் பயன்படுத்திய துணிகளில் கடல் மண் அல்லது உப்பு படிந்து இருக்கும் என அவர்கள் சந்தேகித்தனர்.

இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என அவர்கள் முடிவு செய்த பொழுது எங்கே உண்மை தெரிந்து விடுமோ என்று சரண்யா பயந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் தான் தன்னுடைய குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைக் கேட்ட பிரணாப் மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அதிலும் அவர் கூறிய காரணம் அங்கிருந்தவர்களை திகைக்க வைத்துள்ளது. அதாவது அவர்களது குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்திருக்கிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் சரண்யா வால் குழந்தையை சமாதானப் படுத்த இயலவில்லை.

இதனால் அவர் வீட்டின் அருகிலுள்ள கடற்கரைக்கு குழந்தையை காலை இரண்டு முப்பது மணி அளவில் அழைத்து சென்றிருக்கிறார். அங்கு சென்றும் குழந்தை அமைதி ஆகாததால் சரண்யா மிகுந்த கடுப்பாகி இருக்கிறார். உடனே அவர் கடற்கரை ஓரத்தில் இருந்த கருவிகளின் அருகே குழந்தையை வீசி இருக்கிறார்.

பின்னர் குழந்தையை வேகமாக வந்த அலைகள் கடற்கரைக்கு இழுத்து சென்று உள்ளது அலைகள் குழந்தையை இழுத்துச் சென்று பின்பு குழந்தை உயிரிழந்ததை பார்த்தவுடன் தான் சரண்யா அந்த இடத்தைவிட்டு வந்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒரு குழந்தை அழுததால் அதனைப் பெற்ற தாயை கொலை செய்து விடுவார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது தற்போது போலீசார் சரண்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்