முதல் குழந்தைக்கு எறும்பு பவுடர்! 2வது, 3வது குழந்தைகளுக்கு தலையணை! அடுத்தடுத்து கொலை செய்த கொடூர தாய்! பதற வைக்கும் காரணம்!

நெல்லையில் தன்னுடைய இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவர்களது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு இருக்கும் மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மைக்கேல் மற்றும் மாரியம்மாள்  எனும் தம்பதியினர் நெல்லையை அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்தி அனுசியா( வயது 5 ) என்ற ஒரு மகளும்  துரைசிங் (வயது 4)  என்ற ஒரு மகனும் உள்ளனர்.

மைக்கேலின் மனைவியான மாரியம்மாள்   கடந்த சில வருடங்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் மனநிலை பாதிப்பு காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மகனையும் மகளையும் தலையணையை வைத்து அழுத்தி உள்ளார் . இதனால் மூச்சு திணறி மாரியம்மாள் மகளான சக்தி அனுசியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் 

மேலும் அவருடைய நான்கு வயது மகனான துரைசிங் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது . இருப்பினும் அந்த குழந்தை  சிகிச்சை பலனின்றி  இறந்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து தன்னுடைய இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில், வீட்டிற்கு வந்த மாரியம்மாள் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாரியம்மாள் இதேபோல் இதற்கு முன் ஒரு பெண் குழந்தையும் பெற்று வளர்த்து வந்திருக்கிறார் . தன்னுடைய சொந்த குழந்தை என்றும் பாராமல்  அந்த பெண் குழந்தைக்கு சாப்பாட்டில் எறும்பு பவுடரை கலந்து கொடுத்து அவரையும் கொன்றதாக கூறப்படுகிறது.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது மாரியம்மாள் உண்மையாகவே மனநிலை பாதிக்கப் பட்டதால் தான் இவ்வாறாக குழந்தைகளைக்  கொன்றாரா ? அல்லது அவருக்கு தன்னுடைய குடும்பத்தில் வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா?  என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.