அம்மா எங்கள விட்ருங்க..! கதறிய குழந்தைகள்! துடிக்கத்துடிக்க தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்! அதிர வைக்கும் காரணம்!

மனநிலை சரியில்லாத தாய் 2 குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவமானது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் களக்காடு தோப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சங்கரி. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு வர்ஷினி என்ற 2.5 வயது குழந்தையும், ஆசித் என்ற 3 வயது குழந்தையும் உள்ளனர்.

நம்பிராஜன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சங்கரி தன்னுடைய 2 குழந்தைகளுடன் களக்காட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் தன்னுடைய 2 குழந்தைகளையும் சங்கரி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

அவர்கள் வீட்டில் பாத்திரம் உருளும் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 2 குழந்தைகளின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சங்கரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு சங்கரி ஒப்புக்கொள்ளவில்லை. 

கடந்த சில மாதங்களாக சங்கரி மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த சம்பவமானது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.