என் ஒரு காலை எடுத்துவிடுங்கள்! ஆனால் என் மகளை காப்பாற்றி விடுங்கள்! நெகிழ வைத்த தாய்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பிறக்கபோகும் குழந்தைக்காக தாயொருவர் தன்னுடைய காலை வெட்டி தியாகம் செய்த சம்பவமானது அமெரிக்காவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் புகழ் பெற்ற மாகாணங்களில் டெக்சாஸ் மாகாணமும் ஒன்று. இங்கு 29 வயதான கெய்ட்லின் கோனர் என்ற பெண் வசித்து வருகிறார். தற்போது இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். 2014-ஆம் ஆண்டில் முன்னாள் கணவருடன் தன்னுடைய குடும்பத்தை காண்பதற்கு சென்றுள்ளார். எதிர்பாராவிதமாக இவர்களை பின்தொடர்ந்த காரொன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

கெய்ட்லினின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவருடைய முன்னாள் கணவர் மயிரிழையில் உயிர் தப்பினார். கெய்ட்லின் நகரவே முடியாத அளவிற்கு வலியால் துடித்து கொண்டிருந்தார். பின்னர் ஹெலிகாப்டரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். அப்போது அவருக்கு மேலும் ஒரு இன்பமான செய்தி கிடைத்தது. அதாவது, அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று மருத்துவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் 6 முறை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முயன்றனர். ஆனால் அவை எதுவும் பயனளிக்கவில்லை.

பின்னர் கெய்ட்லினின் காலை மருத்துவர்கள் வெட்டியுள்ளனர். அதன்பின்னர் செயற்கை கால் பொருத்தப்பட்டு நடக்க பயின்றார். 2015-ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தற்போது கெய்ட்லின் தன்னுடைய குழந்தையுடன் மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கு ஈடுகட்டும் வகையில் தன்னுடைய குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.