முதல் நாள் இரவு மகளின் பிறந்த நாள் கொண்டாடிய மதிராணி..! மறுநாள் காலை வீட்டில் சடலமாக தொங்கிய பயங்கரம்! அருப்புக்கோட்டை அதிர்ச்சி!

அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை என்ற இடம் அமைந்துள்ளது. ரெட்டியாபட்டி என்ற இடத்தில் உதவி வேளாண் அதிகாரியாக மதிராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இத்தம்பதியினருக்கு ஜெயஸ்ரீ பத்ரா என்ற 3 வயது மகள் உள்ளார். நேற்று ஜெயஸ்ரீக்கு பிறந்தநாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து பிறந்தநாளை பெற்றோர் இருவரும் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

திடீரென்று இன்று அதிகாலை மதிராணி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌. உடனடியாக உறவினர்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மதிராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக மதிராணி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அலுவல் சுமையினால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.