30 வருடத்திற்கு முன் அடக்கம் செய்யப்பட்ட தாயின் கல்லறையில் இருந்த ஓட்டை..! அதன் உள்ளே பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! என்ன தெரியுமா?

30 வருடங்களுக்கு முன் உயிரிழந்த தாய் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஓட்டை விழுந்துள்ள சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் மார்க் ஹாரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தற்போதைய வயது 41. இவருடைய தாயாரின் பெயர் முரியல் எமாஸ். இவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் இவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி தகனம் செய்யப்பட்டது. பின்னர் கல்லறையின் அருகேயுள்ள பாதுகாக்கப்பட்ட பானையில் இவருடைய சாம்பல் வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னர் தாயின் சாம்பலில் கொஞ்சம் தன்னுடைய கீ செயினில் வைத்துக்கொள்ள விரும்பினார். அதற்காக தாயின் கல்லறைக்கு சென்றபோது, அங்கு ஒரு பெரிய ஓட்டை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அந்த ஓட்டையில் பார்த்தபோது, தன்னுடைய தாயின் சாம்பல் பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கப்பட்டு தாழியில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், "பாரம்பரிய முறையில் இல்லாமல் இவ்வாறு பிளாஸ்டிக் பைக்குள் சாம்பல் வைத்திருந்தது எங்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. இதுபோன்று எவ்வளவோ பேரின் சாம்பல் பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருக்கும். என் தாயாரின் கல்லறை இடத்தை யாரோ தோண்டியுள்ளார்கள். ஆனால் விலங்கு தோன்டியிருப்பதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் என்னுடைய தாயிடம் உடமைகளை திருடுவதற்காக யாரும் முயற்சி செய்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய தாயார் இறந்ததால் இதனை கண்டுபிடிக்க வழியில்லை" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

இந்த செய்தியானது பிரிட்டன் நாட்டு ஊடகங்களில் வைரலாகி வருகிறது.