பெற்ற தாயுடன் சேர்ந்து செய்யக் கூடாததை செய்த தோளுக்கு மேல் வளர்ந்த மகன்..! நம்பி ஏமாந்தவர்கள் சொன்ன பகீர் தகவல்கள்!

தெலுங்கானாவில் பெற்ற தாயும் மகனும் சேர்ந்து வெளிநாட்டில் வசித்து வரும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து நூதன முறையில் ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மாளவிகா தேவி மற்றும் அவரது மகன் வெங்கடேஸ்வரா பிரணவ் கோபால் (வயது 22) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். பெற்ற தாயும் மகனும் ஒன்றாக இணைந்து பல நூதன திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது திருமணத்திற்காக வரன் தேடும் மேட்ரிமோனியில் கீர்த்தி மாதவேணி என்ற பெயரில் போலியான கணக்கு ஒன்றை முதலில் இருவரும் சேர்ந்து துவங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் வசித்து வரும் இளைஞர்களை குறிவைத்து அவர்களிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பேசியுள்ளனர். 

அப்படியாக இந்த தாய் மகன் வீசிய வலையில் சிக்கியவர்தான் கலிபோர்னியாவில் பணியாற்றி வரும் வருண் என்பவர் ஆவார். வருண் இடம் மாளவிகா, கீர்த்தி என்ற பெயரில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் வருண் இடம் தான் மிகப்பெரிய பணக்கார வீட்டுப்பெண் என்றும் தன்னிடம் அதிக அளவு சொத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தான் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் கூறி நாடகமாடி இருக்கிறார் மாளவிகா.

அது மட்டுமில்லாமல் தன் தந்தை சமீபத்தில் இறந்து விட்டதால் தன் பெயரில் இருக்கும் சொத்துக்களை தன் தாயார் தனது பெயருக்கு மாற்றி தர வேண்டுமென்று தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக வருணிடம் கூறி நாடகம் போட்டிருக்கிறார். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தான் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மாளவிகா கூறியிருக்கிறார். இந்த வழக்கை நடத்துவதற்காக தனக்கு ரூபாய் 65 லட்சம் பணம் தேவைப்படுகிறது எனவும் இந்த வழக்கில் வெற்றி பெற்றவுடன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் மாளவிகா வருணை ஏமாற்றியிருக்கிறார். 

கீர்த்தி என்ற பெயரில் மாளவிகா மோசடியில் ஈடுபடுகிறார் என்பதை அறியாத வருண் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்தானே என்று கூறி வங்கி கணக்கின் மூலம் ரூபாய் 65 லட்சம் பணத்தை அளித்து இருக்கிறார். பணம் தன்னுடைய கைக்கு வந்தவுடன் மாளவிகா தன்னுடைய சுய ரூபத்தை காட்டி இருக்கிறார். வருண் மாளவிகாவை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் அவரால் இயலவில்லை. கடைசியில் தான் மாளவிகா என்ற கீர்த்தியால் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். 

வருன் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மாளவிகா மற்றும் அவரது மகன் கோபால் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். வருணை போலவே இந்த தாயும் மகனும் இணைந்து பல ஆண்களை பணத்திற்காக ஏமாற்றி உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.