2018ல் தமிழகத்தின் டாப் 10 வசூல் படங்கள்! முதலிடம் சர்காரா? 2.ஓவா?

2018ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்த பத்து படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


   ஜனவரி ஒன்று முதல் தற்போதைய தேதி வரை ஒரு சில படங்கள் மட்டுமே தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் படி வசூல் செய்துள்ளது. தமிழகம், பிற மாநிலங்கள், ரெஸ்ட் ஆப் இந்தியா, வெளிநாடு என படத்தின் வசூல் பிரிக்கப்படும். அந்த வகையில் தமிழக திரையரங்குகளில் மட்டும் திரைப்படங்கள் இந்த ஆண்டு வசூல் செய்த தொகைகளின் அடிப்படையில் 10 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

   அதாவது ஒரு படம் வெளியாகி உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம், ஆனால் தமிழகத்தில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதைத்தான் இப்போது கூறப்போகிறோம்.  தமிழகத்தை பொறுத்த வரை இரண்டே இரண்டு படங்கள் தான் 100 கோடி ரூபாயை கடந்து வசூல் செய்துள்ளன. இரண்டு படங்கள் 50 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக திரையரங்குகளில் வசூலித்துள்ளன.

   மற்ற படங்கள் அனைத்துமே 50 கோடி ரூபாய்க்கு கீழ் தான் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. ஒரே ஒரு படம் சுமார் 49 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து ஒரு கோடி ரூபாயில் அரை சதத்தை தவறவிட்டுள்ளது. மற்றபடி வேறு படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி வசூல் செய்யவில்லை. எந்த படம் எவ்வளவு வசூல் என்பதை இப்போது பார்க்காலம்.

2.0 – ரூ. 128 கோடி (படம் ஓடிக் கொண்டிருப்பதால் அதிகரிக்கும்)

சர்கார் – ரூ.126 கோடி

காலா – ரூ.59 கோடி

கடைக்குட்டி சிங்கம் – ரூ.52 கோடி

சீமராஜா – ரூ.49 கோடி

செக்க சிவந்த வானம் – ரூ.46 கோடி

தானா சேர்ந்த கூட்டம் – ரூ.44 கோடி

வட சென்னை – ரூ.39 கோடி

அவெஞ்சர்ஸ் – ரூ.32 கோடி

இமைக்கா நொடிகள் – ரூ. 29 கோடி

   இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் தான் இரண்டு இடம்பெற்றுள்ளன. மேலும் காலா கமர்சியலாக வெற்றி பெறவில்லை என்று ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் அது பொய் என்பது 59 கோடி ரூபாய் வசூல் மூலம் தெரியவருகிறது. இதுமட்டும் அல்லாமல் சீமராஜா படத்தையும் சரியாக போகவில்லை என்கிறார்கள். ஆனால் வெற்றிப்படம் என்று அறிவிக்கப்பட்ட மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், தனுசின் வட சென்னையை விட அதிகமாக சீமராஜா வசூல் செய்துள்ளது.

   இந்த பட்டியலில் ஒரே ஒரு நடிகையாக நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நடிகர்களுக்கு இணையான ஸ்டார் வேல்யூ நயன்தாராவுக்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.