கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

வீட்டு வாசலில் நட்டு வைத்தால் விரைவில் வளர்ந்து பலன் தரக்கூடியது முருங்கை மரம். இந்த மரத்தின் காய், கீரையைப் போன்றே முருங்கைப் பூவிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன..


·         தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன் என்று கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால் ஏற்படும் கண்வறட்சி, தலைவலி, பூச்சி பறத்தல் குணமாக முங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்துக் குடித்தால் போதும்.

·         இந்தப் பூவை  காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டால் வெள்ளெழுத்து மற்றும்  கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறும்.

·         ஞாபக சக்தியைக் குறைத்து நினைவாற்றலைத் தூண்டும் தன்மை உண்டு என்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

·         மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதியைத் தீர்க்கும் தன்மையும் முருங்கைப் பூவுக்கு உண்டு.