இந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்துவரும் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து அறவழியில் போராட்டம் - எல்.முருகன்

இந்து மத கடவுள்களை தவறாக சித்தரித்துவரும் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்த விவகாரத்தில், கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.


இன்று காமராஜருடைய பிறந்தநாள் விழா பிறந்தநாளை கமலாயத்தில் கொண்டாடிய பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார், தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன். அப்போது, ‘ அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து வரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். அதன் இயக்குனர் சுரேந்திரன் நடராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். 

மேலும், கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து பா.ஜ.க. மற்றும் இந்து மத ஆர்வலர்கள் நாளை தங்கள் வீட்டின் முன்பு அறவழிப் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார். இந்த விஷயம்தான் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண எதிரியை சட்டத்தின் மூலமும் காவல் துறை மூலமும் மடக்குவதை விட்டு, அவர்களை பெரியவர்களாக்கும் வகையில் முருகன் செயல்படுகிறார். இதெல்லாம் தலைமைக்கு அழகா என்று கேள்வி கேட்கிறார்கள்.

அதானே, யார் அந்த கறுப்பர் கூட்டம் என்று கேட்க வைத்துவிட்டாரே முருகன்.