ஆபாச படங்களுக்கு அடிமையாகும் மாணவிகள்! மாதம் 4000 கருக்கலைப்பு! பெற்றோரை அதிர வைக்கும் ரிப்போர்ட்!

16 வயது முதல் 22 வயது வரையுள்ள மராட்டிய இளைஞர்கள் அதிகமாக கருக்கலைப்பு செய்வதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையில் இயங்கி வரும் தனியார் நிறுவனமொன்று அந்நகரில் இயங்கி வரும் 30 ஆங்கில வழி பள்ளிகளில் பயிலும் 500 மாணவ-மாணவிகளிடையே பாலியல் உறவு குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

குறைந்தபட்சமாக 33% மாணவர்களும், 24% மாணவியரும் உடலுறவில் ஈடுபடுவதாகவும், தங்களின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 40% சதவீத மாணவர்கள் தங்கள் லேப்டாப், செல்போன் ஆகியவற்றின் மூலம் ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக கூறியுள்ளனர். இதில் 25% மாணவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்தி பார்ப்பதற்கு தூண்டுதல் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

மும்பை நகரில் வாழும் இளைஞர்கள் 46% பேர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி விட்டதாக கூறியுள்ளனர். மிகவும் பதறடிக்க வைக்கும் செய்தி என்னவென்றால் கல்லூரி மாணவிகளில் 10% பேர் தவறாக கொண்டு உடலுறவினால் ஏற்பட்ட கருவை கலக்கின்றனர். மாதமொன்றுக்கு மும்பையில் கிட்டத்தட்ட 4000 கருக்கள் கலைக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு மும்பை மாநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் ஆபாச வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து உளவியலாளர்கள் கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான சூழலாகும். பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு அழைத்து செல்வதற்கு வழிவகுக்கக் கூடிய எச்சரிக்கையாகும். இதிலிருந்து தங்கள் குழந்தைகளை பெற்றோர் நிச்சயம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் மீது பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளனர்.