அதிவேகமாக வந்த லாரி..! சுதாகரிப்பதற்குள் நேர்ந்த கோரம்..! தாய், தந்தை, மகன் தலையில் மோதி பலியான பரிதாபம்! ஈரோடு விபத்து!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கந்தசாமி என்ற 45 வயது நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தங்கமணி தங்கமணியின் வயது 35. இத்தம்பதியினருக்கு 5 வயதில் பிரனித் என்றும் மகன் உள்ளான். மூவரும் வேலை நிமித்தமாக ஈரோட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர்.

வேலை முடிந்தபின்னர் நேற்று  அதிகாலை அவர்கள் மீண்டும் திருச்செங்கோடு புறப்பட்டனர். ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக லாரியொன்று இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. 

மோதிய அதிர்ச்சி இருசக்கர வாகனத்திலிருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.