ஊரடங்கு உத்தரவை மீறி தாய் மற்றும் மகன் காவல்துறையினரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்து..! தாயும், மகனும் நடுரோட்டில் அரங்கேற்றிய பகீர் செயல்! என்ன? எங்க தெரியுமா?

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்ற மாதம் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறப்பித்தார்.
அனைத்து மாநில முதல்வர்களும் இந்த முழு ஊரடங்கு உத்தரவை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றும் முதலமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார். தெலங்கானா மாநிலத்தில் இந்த முழு வழங்க உத்தரவு மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. மக்களை எச்சரிக்கும் வகையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது எடுக்கப்படக்கூடிய பல்வேறு வகையான நடவடிக்கைகளைப் பற்றி கூறியிருந்தார்.
மவுலானா என்ற என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் தாய் மற்றும் மகன் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். திடீரென்று தாய் மற்றும் மகன் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். வாக்குவாதம் முற்றி போய் மகனின் கையில் ஒரு கட்டி எடுத்து காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளார்.
சம்பவம் மோசமாவதை உணர்ந்த அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் அவ்விருவரும் காவல்துறையினரிடம் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் அவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.