எமர்ஜென்ஸி காலத்தில் தலைமறைவாக இருந்த மோடி எப்படி ஏரோப்ளேன் ஏறினாராம்? மோடிஜியின் அடுத்த ட்விட்டர் பொய்க் காமெடி அம்பலம்!

1980லேயே டிஜிட்டல் காமிரா பயன்படுத்தினேன்.


85லேயே இ மெய்ல் செய்தேன் என்று அவ்வப்போது வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளும் பிரதமர் மோடியின் அடுத்த காமெடி இது.கடந்த ஜூலை 24 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோடி தனது இளமைக்கால ஃபிளாஷ் பேக் ஒன்றைச் சொல்லி அரங்கில் இருந்தவர்களை கிறங்கடித்து இருக்கிறார்.இது கட்சி பேதமற்ற நட்பு,பெரியோரை பேணுதல், ரகசியம் காப்பது முதலிய நல்ல மெஸேஜ்கள் உள்ள கதை.

வருடம் 1977 ,டெல்லி விமான நிலையம், பிஜேபி தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தும்,மோடியும் நாக்பூர் விமானத்தை பிடிக்க போய்க்கொண்டு இருக்கிறார்கள்.எதிரே பார்த்தால் சந்திர சேகர் ( முன்னாள் பிரதமர் ) வந்துகொண்டு இருக்கிறார்.அவரும் பைரோன் சிங் ஷெகாவத்தும் அரசியலில் எதிரெதிர் துருவங்கள்.

அவரைப் பார்த்ததும் , பைரோன் சிங் தன் பாக்கெட்டில் இருந்த பான் மசாலா பாக்கெட்டுகளை எடுத்து மோடியின் ஜிப்பா பாக்கெட்டில் போட்டுவிட்டு சந்திர சேகரை எதிர் கொண்டாராம் . அவரும் நலம் விசாரித்து விட்டு , உடல் நலம் பற்றி விசாரித்தபடியே பைரோன் சிங்கின் பாக்கெட்டுகளை செக்செய்து பார்த்தாராம்.அப்போதுதான் மோடிக்கு அரசியலில் ஒரு கண்திறப்பு கிடைத்ததாம்.இன்னும் நிறையப் பேசி இருக்கிறார்.ஆனால்,இந்த 1977ல் விமானப் பயணம்தான் நெட்டிசன்களை நெட்டித்தள்ளி இருக்கிறது.

1977 என்று சொன்னவர் எந்த மாதம் என்று சொல்லி இருந்தால் அவர்கள் இன்னும் குஷாலாகி இருப்பார்கள். ஏனென்றால் 1977 மார்ச் வரை எமர்ஜென்சி அமலில் இருந்தது.ஜெயப்பிரகாஷ் நாராயணன் முதல் வாஜ்பாய் வரை சிறையில் இருந்தார்கள்.நமது பிரதமர் மோடியோ சர்தார்ஜி வேடத்தில் தலைமறைவாக இருந்தார்.18 மாதம் தலைமறைவாக இருந்த மோடி , பைரோன் சிங்கோடு ஏரோப்ளேன் ஏற வந்தது எப்படி என்று அவரை ,ட்விட்டரில் ஓட விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.