பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மோடியை உடனே வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் ஆபத்து! மன்மோகன் சிங் விடுக்கும் ரெட் அலர்ட்!

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மன்மோகன் சிங் பிரத்தியேகப் பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய மன்மோகன் சிங் பிரதமர் மோடியின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியை அதிர்ச்சிகரமான மிக மோசமான பேரழிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மோடியின் ஆட்சியில் வணிகர்கள் , மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி நடைமுறையை சரியாக கையாளாத ஆகியவை நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப நூறு முறை கூறினாலும் அது உண்மையாகி விடாது என்று மோடியை விமர்சித்துள்ள மன்மோகன் சிங், தேசப் பாதுகாப்பில் பாஜக ஆட்சி தோல்வி அடைந்து விட்டதாக சாடியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் ஆனது 176 சதவீதம் அதிகரித்து விட்டதாகவும்…எல்லை தாக்குதல் ஆயிரம் சதவீதம் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புல்வாமா வில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அமைச்சரவை கூட்டத்தை கூட்டாத பிரதமர் நரேந்திர மோடி, தன்னை விளம்பரப் படுத்தும் படப்பிடிப்பு ஒன்றில் பிஸியாக இருந்ததாகவும் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை முன்கூட்டியே கணிப்பது உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாகவும் அவர் விமர்சித்திருக்கிறார். மக்களுக்காக ஆட்சி செய்யாத மோடி அரசை விரைவில் வெளியேற்ற மக்கள் முடிவு செய்து இருப்பதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.