மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கமல் எங்கு போட்டி தெரியுமா!

மக்கள் நீதி மையம்


நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி இரண்டாவது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை மட்டும் கமல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் இரண்டாவது மற்றும் இறுதி வேட்பாளர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் ராமநாதபுரம் தொகுதியில் கமலுக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் கமல் போட்டியிட வில்லை என்பது உறுதியாகியுள்ளது.

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் போதே அடுத்த முறை முக்கிய நபர்கள் போட்டியிடுவார் என்று கமல் கூறியிருந்தார். அந்த முக்கிய நபர் கமல் தான் என்று பலரும் கருதி யூகங்களை வெளியிட்டு வந்தனர்.

ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு உள்ளார். மாறாக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்து மக்கள் நீதி மையம் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வைக்க போவதாக கமல் கூறியுள்ளார்.