திருமணமாகி 7 ஆண்டு கால தவிப்பு! ஒரு வழியாக அப்பாவான அகில உலக சூப்பர் ஸ்டார்!

அகில உலக சூப்பர் ஸ்டார் என கோலிவுட்டில் அழைக்கப்படும் மிர்ச்சி சிவாவிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.


மிர்ச்சி சிவா மற்றும் அவரது மனைவி ப்ரியாவிற்கும் 2012 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தல அஜித் மற்றும் ஷாலினி இவர்களின் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தனர். நடிகை ஷாலினியும், மிர்ச்சி  சிவாவின் மனைவி ப்ரியாவும் ஜோடியாக இரட்டையர் பாட்மின்டன் போட்டியில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 

திருமணமான பிறகு கிட்டத்தட்ட 7 வருடங்களாக குழந்தை இல்லாத இந்த தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரியா மற்றும் அவரது குழந்தையும் நலமுடன் உள்ளதாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 பல முன்னணி ஹீரோக்களுடன் மிர்ச்சி சிவா இனைந்து நடித்துள்ள பார்ட்டி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.