பட்டப்பகலில் மெரினா கடற்கரையில் உல்லாசம்! இளைஞனால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

பட்டப்பகலில் மெரினா கடற்கரையில் உல்லாசம் அனுபவித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


29-ஆம் தேதியன்று எழும்பூர் ரயில் நிலையத்திலுள்ள 4-வது பிளாட்பார்மில் இளைஞர் ஒருவர் தன்னை விட வயது சிறிய பெண்ணுடன் நின்று கொண்டிருந்தார். இருவரும் முகத்தில் ஏதோ சுணகத்துடன் இருப்பதை தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேர் பார்த்துள்ளனர். 

அவர்கள் இருவரும் நின்றுகொண்டிருந்த 2 பேரிடமும் சந்தேகத்தின் பேரில் பேச்சு கொடுத்தனர். அப்போது அந்த இளைஞர் தன்னுடைய பெயர் அன்பழகன் என்றும், விருதாச்சலத்தை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். இளம்பெண் தான் 9-வது வகுப்பில் படிப்பதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக எங்களுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவரிடமும் தனித்தனியாக விசாரணையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண் தான் கற்பழிக்கப்பட்டதாக நிறுவன அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவர்கள் இருவரையும் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் காவல்துறையினரின் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் அன்பழகன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சந்தித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்போதெல்லாம் அன்பழகன் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் மெரீனா கடற்கரையில் பட்டப்பகலில் வெளியே உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போதுதான் தொண்டு நிறுவன ஊழியர்களிடம் இருவரும் சிக்கி கொண்டனர்.

திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் துறையினர் அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.