100 அடியில் சுர்ஜித்..! 40 அடி தான் தோண்ட முடிந்தது..! இனி..? கைவிரித்த அமைச்சர்! சோகத்தில் தமிழகம்!

நடுக்காட்டுபட்டியில் சிறுவனை காட்டுவதற்காக ஆரம்பித்த துளையிடும் பணி வெற்றிகரமாக அமையுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் முதலில் 25 அடி ஆழத்தில் இருந்ததாகவும் மேலும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது கைகளில் இருந்து குழந்தை நழுவி 70 அடிக்கு சென்றது. ஆனால் தற்போது நிலவரப்படி குழந்தை 80 அடி தாண்டியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனையடுத்து மிகவும் சக்திவாய்ந்த ரிக் இயந்திரத்தை பயன்படுத்தி பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது அந்தப் ஆழமான துளையின் வழியாக குழந்தையை மீட்டு விடலாம் என்று மீட்புக்குழுவினர் கூறியிருந்த நிலையில் தற்போது பாறைகளுக்கு நடுவே துளையிடும் வேலை மிகவும் சவாலாக இருக்கிறது என்று மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். சக்தி வாய்ந்த ரிக் இயந்திரத்தை பயன்படுத்தி இதுவரை 40 அடி மட்டுமே துளையிடப்பட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைப்பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் , முறையாக மண் பரிசோதனை செய்து பின்புதான் பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் வேலையை ஆரம்பித்தோம். ஆனால் இவ்வளவு பெரிய சவாலாக அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது மேற்கொண்டு வரும் இந்த பணி வெற்றி அளிக்குமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார். 

ஆகையால் இதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா என்று மற்ற குழுவினர் இடமும் சிறுவன் சுஜித் இன் பெற்றோரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் கூறினார்.