வகுப்பறையில் திடீர் மயக்கம்..! இடுப்புக்கு கீழ் செயல்படாமல் போன உறுப்புகள்! தவித்த 10ம் வகுப்பு மாணவியை நெகிழ வைத்த செங்கோட்டையன்!

நாள்பட்ட காசநோயால் இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகள் செயல் இருந்திருக்கும் சென்னையை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தேர்வு எழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி பிரியதர்ஷினி நாள்பட்ட காசநோய் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாணவிக்கு பள்ளியின் முதல்வர் அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக மாணவி பிரியதர்ஷினி தன்னை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து அந்த கோரிக்கை பரிசீலித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவி பிரியதர்ஷினியின் கோரிக்கையை ஏற்று அவர் தேர்வு எழுதுவதற்கு அனைத்தை நடவடிக்கைகளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி பிரியதர்ஷினி அமைச்சர் செய்த உதவிக்கு நன்றி கூறும் வகையில் நீங்கள் செய்த உதவியை என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.