அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 73 ஜோடிகளுக்கான திருமணங்கள் வருகின்ற 15.2.2021 அன்று நடைபெற உள்ளது.
ஜெயலலிதா 73வது பிறந்த நாளில் 73 ஜோடிகளுக்கு திருமணம்... அமைச்சர் வேலுமணி பிரமாண்ட ஏற்பாடு
இதற்கான அழைப்பிதழை, தமிழக முதல்வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினார் மாண்புமிகு அமைச்சர் வேலுமணி.
இதையடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவரது இல்லத்தில் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.