மோடி தான் இனி எங்கள் டாடி! அமைச்சர் போட்ட ரைமிங்கான டைமிங் குண்டு!

பிரதமர் மோடி தான் தான் உள்ளிட்ட அனைவருக்கும் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.


விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட எங்கள் அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்குடாடியாக இருந்து வழிகாட்டுகிறார்.இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும்.

மோடி எங்களின் டாடியாக இருப்பதால் எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தேர்தலில் நாங்கள் எப்படி வெல்கிறோம் என்று உங்களுக்கு பிறகு தெரியும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.