ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அநியாயமாக உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு அவனது பெற்றோர் தான் காரணம் என்று கடம்பூர் ராஜூ மிகவும் கடிந்து பேசியுள்ளார்.
சுர்ஜித் சாவுக்கு காரணம் அவன் அம்மா, அப்பா தான்! பதற வைக்கும் தகவலை வெளியிட்ட தமிழக அமைச்சர்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் பிரிட்டோ - கலாமேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரிட்டோ தோட்டத்துடன் அமைந்த வீடு ஒன்றை அப்பகுதியில் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தோட்டத்தில் விளையும் சோள காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். நீண்ட நாட்களாக உபயோகப் படுத்தப் படாமல் வைத்திருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25 ஆம் தேதி, மாலை 5:30 மணி அளவில் பிரிட்டோவின் இளைய மகன் சுர்ஜித் (2 வயது ) உள்ளே விழுந்து விட்டான்.
உள்ளே விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் காப்பாற்றுவதற்காக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மீட்பு குழுவினர் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் பாடுபட்டனர். சுமார் 80 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணியில் கடந்த 29ஆம் தேதி துரதிஷ்டவசமாக சுர்ஜித்தின் உடலை மட்டுமே மீட்டு எடுக்க முடிந்தது. குழந்தை சுஜித் இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிறுவன் சுர்ஜித்தின் மரணத்திற்கு காரணம் அவனின் பெற்றோர்கள் தான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் சுர்ஜித்தின் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து கிடையாது, மாறாக பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அவர்களது சொந்த இடத்திலேயே நடைபெற்ற உயிர் இழப்பு என்று கூறினார்.