ஒரு லிட்டர் பால் ரூ.140! பெட்ரோல் விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை! பாகிஸ்தானின் பரிதாப நிலை!

பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலையை விட பால் விலை அதிகமாகவுள்ள செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாகவே பாலின் விலை உயர்ந்து வருகிறது. மொஹரம் பண்டிகையையொட்டி இன்று பாகிஸ்தான் நாட்டில் பாலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

அந்நாட்டில் பெட்ரோல் விலையை விட பால்விலை அதிகமாகவுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலானது 113 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலானது 91 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பால் விலையுயர்வினால் பாகிஸ்தான் மக்கள் பெரிதளவில் பாதித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஒவ்வொரு மொஹரம் பண்டிகைக்கும் நாங்கள் கடைகள் அமைத்து பொதுமக்களுக்கு ஜூஸ், பால் முதலியவற்றை வழங்குவது வழக்கம். இந்த வருடமானது பால்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் முறையில் இந்த வருடமும் மொஹரத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 

கராச்சி கமிஷனரான இஃப்திகார் ஷல்வானி பால் விலையை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்த விலை உயர்வானது பாகிஸ்தான் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.