மூச்சு கூட விட முடியலடா..! நண்பன் அம்ரித் மடியில் சடலமான யாகூப் முகமது..! சொந்த ஊர் திரும்பிய போது ஏற்பட்ட விபரீதம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய நண்பரின் மடியில் உயிரை விட்ட சம்பவமானது வடஇந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரித்குமார். இவருடைய நெருங்கிய தோழரின் பெயர் யாகூப் முகமது. இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்திலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் இருவரும் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாகவே தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். பலநூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தினால் நடந்தே பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இவர்களுடைய அவலத்தை எதிர்க்கட்சிகள் உணர்த்திய பிறகே, மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு ரயில் வசதிகளை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொண்டனர். ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதால் பலரும் லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வகையில் அமரத் குமார் மற்றும் யாகூப் முகமது ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தங்களுடைய சொந்த மாநிலமான குஜராத்துக்கு செல்வதற்காக லாரியில் புறப்பட்டனர். லாரியில் கூட்டம் நிரம்பி வழிந்த காரணத்தினால் அவர்களால் மூச்சு கூட சரிவர விட இயலவில்லை. இதனால் 400 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு அம்ரித் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக அவர் லாரியில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.

தன்னுடைய தோழர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை உணர்ந்த முகமது உடனடியாக லாரியில் இருந்து கீழே இறங்கினார். வனப்பகுதி என்பதை அறிந்திருந்தும் வேறு வழியின்றி இருவரும் கீழே இறங்கினர். அப்பகுதியில் வருவோரிடம் உதவியை கேட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் தன்னுடைய நண்பரான முகமதின் மடியிலேயே அம்ரித் குமார் உயிரிழந்துள்ளார். தன்னுடைய தோழரை அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அங்கேயே இருந்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் யாரோ ஒருவர் பதிவேற்றம் செய்தார். அதன்பிறகு சமூகவலைத்தளம் முழுவதிலும் இந்த புகைப்படமானது வைரலானது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டெடுத்து சிவ்புரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அங்கு யாகூபுக்கு வைரஸ் தொற்று அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவமானது காண்போரை மிகவும் மனம் உருக வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்வி கேட்பது போன்று அமைந்திருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.