மியா கஃலிபா ஆபாச படங்களில் நடித்து சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? அதிர வைக்கும் தகவல்!

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் குறைவான பணத்தையே சம்பாதித்ததாக மியா கலிஃபா கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மியா கலிஃபா. 2014-ஆம் ஆண்டில் இந்தத் துறையில் வந்து தன்னை இணைத்து கொண்டார். பல்வேறு ஆபாச குறும்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இவர் தற்போது அளித்த பேட்டியில் ஆபாச படங்களில் நடித்து மிகவும் குறைவாகவே சம்பாதித்தேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறுகையில், "2014-ஆம் ஆண்டில் ஆபாச படத்துறைக்கு வந்தேன். வந்தவுடனே நான் மிகவும் பிரபலம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஆபாச படங்கள் நடிப்பது இஸ்லாமிய மதத்திற்கு  எதிரானது என்று கூறி ஐ.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவுடன், நான் அவ்வகையான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

தற்போது எந்த ஒரு சாதாரண வேலையும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். என்னால் இயல்பான வாழ்க்கையை வாழ இயலவில்லை. உலகில் உள்ள பல தரப்பு மக்களிடம் சென்றடைந்து இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழ்வது என்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.

தற்போது எந்த ஒரு வேலையும் இன்றி சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் கோடிஸ்வரி ஆக வாழ்வதாக பொது மக்கள் நினைக்கின்றனர். ஆனால் நான் ஆபாச படங்களில் நடித்து வரும் 12,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே சம்பாதித்தேன். தொழிலை விட்ட பிறகு சாதாரண வாழ்க்கைக்காக ஒரு வேலையை தேடி இன்று வரை அலைந்து கொண்டிருக்கின்றேன்" என்று கண்கலங்க கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.