மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடி குறைப்பு - தமிழக முதல்வர் அறிவிப்பு!

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாக குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மெட்ரோ ரயிலில் அதிகபட்சமாக வசூலிக்கப்படும் 70 ரூபாய் கட்டணத்தை 50 ரூபாயாக குறைத்தும், 5 முதல் 12 கிலோ மீட்டர் வரையிலான பயணங்களுக்கு வசூலிக்கப்படும் 40 ரூபாய் கட்டணத்தை 30 ரூபாயாகவும் குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதேபோல ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. QR கோடு மற்றும் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணம் செய்தால் 20 % கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.