மெர்சல் படம் படு நஷ்டம்! விஜயை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளரின் பரிதாப நிலை! புட்டு புட்டு வைத்த பிரபலம்!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது .


நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் மூன்று வேடத்தில் நடித்திருப்பார் . இந்த படம் விஜய்  ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது என்று கூறப்படுகிறது .

ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய  பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் , மெர்சல் படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்து இருந்தால் அந்த படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மெர்சல் படத்துக்குப் பிறகு  எதற்கு இன்னும் ஒரு படம் கூட தயாரிக்கவில்லை எனவும் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் .

மேலும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அந்த படத்திற்கு பிறகு அவர்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டார்கள் . மெர்சல் படம் வசூலில் லாபம் செய்திருந்தால் ஏன் அவர்கள் அப்படி செய்ய வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் . ஆகவே மெர்சல் படம் நிச்சயமாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் பிரபல  தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார் .

மெர்சல் படம் வெளியாகி இரண்டு வருடம் ஆன நிலையிலும் கூட இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்ததா அல்லது நஷ்டத்தை தந்ததா என்று பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது .