பார்த்து ரொம்ப நாளாச்சு..! ஹோட்டலுக்கு போலாமா? மீரா மிதுனை அழைத்தாரா எஸ்.ஜே.சூர்யா? வைரல் ஆடியோவால் பரபர!

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.


இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் இயக்குனர் சேரன் மீது தவறான குற்றம் சாட்டியதால் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நடிகை மீரா மிதுன் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். சமீபகாலமாக மீரா மிதுன் இன் ஆடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி வருகிறது. இதனால் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தன்னுடைய நண்பர்களுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோவில் நடிகை மீரா மிதுன் , எஸ் ஜே சூர்யா எனக்கு நல்ல நண்பர். ஒரு முறை அவருடன் பேசும்போது பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. மீட் பண்ணலாம். ஃபிஷர்மேன் ஸ்கோவுக்கு ஜாலியா ஒரு ரைட் போகலாம் என்று எஸ் ஜே சூர்யா தன்னிடம் கூறியதாகவும், அதற்கு நான் அப்படி எல்லாம் வரமாட்டேன் என்று இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கு பதில் அளித்ததாகவும் அந்த ஆடியோவில் மீரா மிதுன் கூறியிருக்கிறார். 

 உண்மையிலேயே எஸ் ஜே சூர்யா மீரா மிதுன் இடம் அவ்வாறு பேசினாரா இல்லையா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.