காட்டக் கூடாததை காட்டி பார்க்கச் சொன்னார்! நடிகர் மீது 33 வயது பெண் டான்ஸ் மாஸ்டர் பகீர் புகார்!

பிரபல நடன இயக்குநர் ஒருவர் தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறும், வருமானத்தில் ஒரு பகுதியை தருமாறும் கட்டாயப்படுத்தியதாக பிரபல பெண் நடன இயக்குநர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


இந்தித் திரையுலகில் பிரபல நடன இயக்குநராக வலம்வரும் கணேஷ் ஆச்சார்யா தமிழில் ரவுத்திரம் மற்றும் மற்ற மொழிகள் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். இந்தியில் பத்மாவத், கன்னடத்தில் பயில்வான் உள்ளிட்ட படங்களுக்கு நடனக் கலைஞராகவும் 4 படங்களுக்கு இயக்குநராகவும் இருந்துள்ளார்.

கணேஷ் ஆச்சார்யா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தின் (IFTCA) பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர் மீது மகாராஷ்ட்ர மகளிர் ஆணையம் மற்றும் காவல் நிலையத்தில் பெண் நடன இயக்குநர் ஒருவர், பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுரண்டுவதாகவும், தனது நிலையைப் பயன்படுத்தி சினி டான்சர்ஸ் அசோசியேஷனை கேவலப்படுத்துவதாகவும் மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டில் இருந்து ஆச்சார்யா விடுபட்டிருந்தார்.