சந்திரன், குரு என்று கிரகங்களின் பெயரை மனிதனுக்கு வைக்கலாமா? பிரபல ஜோதிடர் சொல்வதைக் கேளுங்க.

இந்த உலகில் தோன்றிய அனைத்து பொருட்கள் மற்றும் அனைத்து உயிர் இனங்களுக்கு பெயர் ஒன்று உள்ளது நாம் எழுதும் எழுத்துக்கு கூட பொருள் பட ஒரு சொல் பெயர் உள்ளது. எதையாவது குறித்து சொல்ல வேண்டுமானால் அதன் பெயரை வைத்து சொல்கிறோம்.


 இதுபோல் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் என்று ஒன்றை வைத்து தான் அழைப்பாளர்கள் இந்த உடலில் உயிர் இருக்கும் வரை தான் அவனது பெயர் இருக்கும் அவனது உயிர் போன பின்பு அதை பிணம் என்றே கூறுவார்கள். ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு தான் வாழும் காலத்தில் மட்டுமே பெயர்.

பொது மக்களக்காக வாழ்ந்த சிலர் தான் இறந்து பிறகு இப்படிப்பட்டவர் வாழ்ந்தார் என பெயரை மட்டுமே இந்த உலகத்திற்கு விட்டு செல்வார்கள் ஒரு சிலர் மட்டும் தான் வாழ்ந்தாக பெயர் என்றுமே மறையாமல் இருக்க தன் பேரன் பேத்திகளுக்கு வைத்து அழுகு பார்ப்பார்கள் ஒருவர்க்கு பெயர் வரக் காரணமாக ஜாதகத்தில் ஏதோ கிரக காரணமாக இருக்கும்.

பொதுவாக ஒருவர்க்கு தெய்வங்கள் பெயர் தான் வைப்பார்கள் இன்னும் சிலர் தேசிய தலைவர்கள் பெயர்கள் வைப்பார்கள் எந்த பெயர் வைத்தாலும் பெயர் சொல்லும்படியாக வாழ்வதே அதன் அர்த்தம் உள்ளது. பெயர் சொல்லும்படியாக வாழ்வது என்பது எளிதான காரியம் இல்லை. கடவுள் பெயரை வைத்து விட்டால் வாழ்வு எப்படி இருந்தாலும் என்ன எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என அமைதியாக இருந்து விடலாம்.

கடவுள் பெயர் இல்லையென்றால் வாழ்வு விதி விட்ட வழி என அமைதியாக இருந்து விட வேண்டியது தான் இந்த உலகில் ஒர் வினைக்கு எதிர்வினை ஓன்று உண்டு. இதில் நாம் நல்வினை மட்டுமே நாம் எடுத்து கொள்வோம் கெட்ட வினை விட்டு விடுவோம். சினிமாவில் ஹீரோ மட்டுமே நமக்கு பிடிக்கும் வில்லனை யார்க்கும் பிடிக்காது நமது புராண இதிகாசயங்களில் கூட கதையின் ஹீரோவின் பெயரை மட்டுமே நாம் விரும்பி வைப்போம்.

ராமாயணத்தில் ராமன் பெயர் வைப்போம் ஆனால் ராவணன் பெயர் வைக்க மாட்டோம் மகாபாரத கதைகளில் அர்ஜுனன் தர்மர் மகாதேவன் கர்ணன் பீமன் ஆகியோர் பெயர் வைப்பார்கள் ஆனால் துரியோதனன் துச்சாத்தன் என்கிற பெயர்கள் வைக்க மாட்டார்கள் கிருஷ்ணன் பெயர் வைப்போம் கம்ஷன் பெயர் வைக்க மாட்டோம் முருகன் பெயர் வைப்போம் ஆனால் சூரபத்தன் பெயர் வைக்க மட்டோம் இதே போல் தான் நவகிரகஙகள் பெயர் வைக்கும் போது நாம் கவனிக்க வேண்டும்

பொதுவாக நவகிரகங்கள் ஹீரோ கிரகங்கள் பெயரை வைப்போம் சூரியன் சந்திரன் குரு சுக்ரன் என்று வைப்போம் ஆனால் ஒரு போதும் சனி, ராகு, கேது என துஷ்ட பலன்கள் தரக்கூடிய பெயர்களை வைக்க மாட்டோம் எனில் நம் மனம் நல்லதையே நினைப்பது, நல்லதையே பேசுவதும், நல்லதையே செய்வது என்று இருக்கும் நாம் நம் வாயில் கெட்ட சொல்லே சொல்லக் கூடாது என நினைக்கும் நாம் சனி, ராகு, கேது, என ஒருவரை கூப்பிடுவது கூட அபசகுனம் என எண்ணுவோம் இதில் நம் மன ரீதியாக நாம் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ

அதுவே நாம் ஆவோம் என்கிற நம்பிக்கை இருப்பதால் தான் இந்த நம்பிக்கை அடிப்படையில் நாம் துஷ்டர்கள் பெயரை ஒருவர்க்கு வைப்பது இல்லை அதே போல் சூரியன் சந்திரன் குரு இந்த கிரக பெயர்கள் அதிகம் வைப்பார்கள் இதே போல் செவ்வாய் புதன் என அதிகம் வைக்க மாட்டார்கள்.

பொதுவாக கிரகங்கள் பெயர்கள் வைப்பதால் குறைந்த பட்சம் அந்த கிரகங்கள் பட்ட கஷ்டங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் கிரகங்கள் பற்றி புராண வரலாறு கதைகள் நிறைய உண்டு அந்த வரலாற்று கதை சம்பவங்கள் போல் சில சம்பவங்கள் நடக்க கூடும். நம்மில் பலர் சந்திரன் என்னும் சந்திரசேகர் எனவும் வைப்பார்கள் சந்திரன் பெயர் வைத்தவர்கள் பெரும்பாலும் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள்.

சூரியன் என தொடங்கும் பெயர் கொண்டவர்கள் உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். சிலர் குரு என்று பெயர் வைத்து கொண்டு மதுக்கடையே கதி என இருந்தால் குரு விற்கு மதிப்பு அவ்வளவுதான். பெயர்க்கு தக்கப்படி வாழ வேண்டும் என நினைப்பவர்கள் குறைவு தான்.

நம்முடைய குலதெய்வம் பெயர் வைப்பார்கள் குலதெய்வம் அதிபதி குரு தான் குரு மட்டும் வலிமையோடு 5-9-ம் பாவ தொடர்ப்பில் இருந்தால் குலதெய்வம் பெயர் வைக்கலாம் மேலும் குலதெய்வமே அவர்களை காத்து நிற்க்கும். எந்த தெய்வ பெயர் வைத்தாலும் அந்த தெய்வ சக்திக்குரிய கிரகம் நன்றாக இருக்கும் பெயர்க்கு ஏற்ற கிரகம் சரியில்லை என்றால் வாழ்வில் வேதனையே மிஞ்சும் தற்காலம் பேஷன் என்கிற பெயரில் தினுசு தினுசான பெயர்கள் வைக்கிறார்கள் பெயர்க்கு தக்கப்படி கிரகங்கள் பாவங்கள் வலிமையோடு இருந்தால் ஜாதகர் வாழ்வு நன்றாக ஆனந்தமாக அமையும்

கணித்தவர்

R. சூரியநாராயணமூர்த்தி

செல் .. 9443423665 & 9865065849