சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையில் புதிய திருப்பம்! கொலை என போலீஸ் மாமா பகீர் புகார்!

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் எனவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது போலீஸ் மாமா கூறியுள்ளார்


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி அண்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் தோனி மாதிரி நடித்து அசத்தியதால் இவரது இந்த திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம். 

இந்நிலையில் 34 வயதாகும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணமடைந்த சம்பவம் குறித்து அவரின் போலீஸ் மாமா பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவரது மரணத்தின் பின்னணியில் ஏதோ சதி இருப்பது போல தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரது மாமா அதிர்ச்சித் தகவல் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிபிஐ இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.