குடும்ப தகராறின் காரணமாக மிதாலி சந்தோலா என்ற புகழ்பெற்ற பத்திரிகையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் புதுடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் பிரபல பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு! அதிர வைக்கும் காரணம்!
வடமாநிலங்களில் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் ஒருவராக மிதாலி சந்தோஷ விளங்குகிறார். அங்குள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இவருடைய சாதனையாகும்.
நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் கிழக்கு டெல்லி பிரதான சாலையில் தன்னுடைய ஹியுண்டாய் காரில் மிதாலி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது சமூகவிரோதிகள் சிலர் முகமூடி கட்டிக்கொண்டு மாருதி காரில் இவரை முந்திச் சென்று மடக்கியுள்ளனர்.
பிறகு கையில் இருந்த துப்பாக்கி மூலம் இரண்டு முறை காரை நோக்கி சுட்டுள்ளனர். ஒரு குண்டு கார் முன்பகுதி கண்ணாடியிலும், மற்றொன்று மிதாலியின் கையிலும் பாய்ந்துள்ளது. பின்னர் இவருடைய காரின் மீது முட்டைகளை வீசி விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் எவரேனும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனரா என்பதனை விசாரித்து வருகின்றனர். மிதாலியிடம் விசாரித்ததில், அவருக்கு தன் குடும்பத்தின் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
காவல்துறையினர் குடும்பத்தகராறு காரணமாக குடும்பத்தினருள் சிலர் இந்த காரியத்தை செய்து இருக்கக் கூடுமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது கிழக்கு டெல்லி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.