அடுத்த ஆண்டு முதல் இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வராது! மாருதி சுசூகி திடீர் முடிவு!

மாருதி சுசுகி நிறுவனமானது அடுத்த ஆண்டு முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த உள்ளது.


இந்திய கார் சந்தையில் மிக முக்கிய இடம் பிடித்திருப்பது மாருதி சுசுகி. டீசல் கார்களை அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் இது உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ள பி எஸ் 6 மாசு வெளியீடு நடைமுறைகள் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஆயிரத்து 500 சிசிக்கு குறைவான டீசல் என்ஜின் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாது. அவ்வாறு உற்பத்தி செய்யும் பட்சத்தில் அது செலவை அதிகரிக்கும்.

எனவே டீசல் கார்கள் உற்பத்தியை படிப்படியாக குறைத்து அடுத்த ஆண்டுக்குள் நிறுத்திக் கொள்வதாக அந்நிறுவனத்தின் தலைவர் பார்கவா தெரிவித்துள்ளார். கார் வாங்குவோரின் வெறுப்பு பட்டியலில் முதலிடம் பிடிப்பது டீசல் கார்கள் தான். ஆனால் அவற்றின் உற்பத்தி தற்போது மாருதி சுசுகி நிறுத்த உள்ளதால் அடுத்தபடியாக சிஎன்ஜி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி மீது கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மாசு ஏற்படுவதை தடுப்பதற்காக சிஎன்ஜி பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்கும் என்பதால் இது நல்ல முடிவாக இருக்கும் என்றும் பார்கவா கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அந்நிறுவனத்தின் சில கார்களின் விலைகளும் உயரும் உள்ளன.