திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் வெளிநாடு பறந்த கணவன்..! தோழியுடன் சேர்ந்து இளம் மனைவி செய்த விபரீத செயல்! ஆரணி பரபரப்பு!

தோழியின் காதலுக்கு உதவிய மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஒகையூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கருப்பாயி. தம்பதியினருக்கு அன்பு என்ற மகள் உள்ளார். இதனிடையே 5 மாதங்களுக்கு முன்னர் அன்பு 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் உடன் பெற்றோர் கட்டாய திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.

திருமணமான உடனே ஜெகதீசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். இதனால் அன்பு தன்னுடைய தாயாரின் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே நேற்று அன்பு வாயில் நுரை தள்ளியபடி தன்னுடைய படுக்கை அறையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கருப்பாயி அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வரும் வழியிலேயே அன்பு இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே லாஞ்சரம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஒன்றாக படிக்கும் மாணவி ஒருவரின் காதலுக்கு உதவ முயன்று அன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதாவது அன்புடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கு புக்கிரவாரி பகுதியை சேர்ந்த தீனா என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவீட்டாரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவி, அன்பு மற்றும் தீனா இருசக்கர வாகனத்தில் வெள்ளிமலை கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவியும், தீனாவும் தலைமறைவாகி விட்டனர். சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் விசாரணை நடத்தியதில் அன்புடன் அவள் பள்ளியிலிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. உடனடியாக அவருடைய பெற்றோர் அன்பின் வீட்டிற்கு வந்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்து சென்றுள்ளனர்.

இதனால் பயந்து போன அன்பு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது எஸ்.ஒகையூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.