முதல்முறையாக சந்தித்த பிறகு ஆணும் பெண்ணும் சந்தித்துக்கொண்ட 4 மணி நேரத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 மணி நேர காதல்! முதல் சந்திப்பிலேயே கல்யாணம்! லயித்த காதல் ஜோடி!
கொல்கத்தாவில் சுதீப் கோஷல் என்ற இளைஞர் வசித்துவந்தார். இவர் பிரித்திமா பானர்ஜி என்ற பெண்ணுடன் ஃபேஸ்புக்கில் நண்பரானார். இருவரும் ஃபேஸ்புக்கில் பல மாத காலங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் காதல் எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை அவர்கள் வெளிக்காட்டவில்லை. இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து கொள்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படாமல் போயின. இந்நிலையில் சமீபத்தில் கொல்கத்தாவில் துர்கா பூஜையன்று எதிர்பாராவிதமாக சந்தித்துக் கொண்டனர்.
அப்போது சுதீப் தன்னுடைய காதலை பிரத்திமாவிடம் வெளிப்படுத்தினார். சற்று தயங்கிய பிரத்திமா யோசித்தார். இருவரும் தனித்தனியே பிரிந்து சில மணிநேரங்களில் வீடியோவில் பேசிக்கொண்டு இருந்தனர். இருவருக்கும் பிடித்து போன பின்னர், கடவுளின் சந்நிதானத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து பிரதீப் கூறுகையில், "எனக்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. இருப்பினும் என்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு முன்னால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது மனநிறைவு தருகிறது" என்று கூறினார்.
திருமணத்தை குறித்து பிரத்திமா கூறுகையில், " நான் பிரதீப்பை கோவிலில் சந்திப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இது தெய்வம் நினைத்து எங்களை ஒன்று சேர்த்து வைத்தது போன்று தோன்றுகிறது" என்று கூறினார்.
தற்போது இருவரும் இருவீட்டாரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.