கணவன் மனைவி உட்பட 4 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் வைத்து செய்யக் கூடாத தொழில் செய்த கணவன் - மனைவி! சோதனையில் சிக்கிய ஏடாகூட பொருள்! திருவள்ளூர் திகுதிகு!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு முரளி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் கிராந்தி. இருவரும் அவர்களுடைய வீட்டின் முன்புறத்தில் மருந்து கடை வைத்து நடத்தி வந்தனர். ஆனால் இவர்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக மாவட்ட சுகாதார ஆய்வாளரான காவலன் என்பவரின் தலைமையில் அப்பகுதிக்கு சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் வீட்டினுள் மருத்துவம் பார்த்ததற்குரிய அடையாளங்களாக ஊசிகள் முதலியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆங்கில மருத்துவம் பார்த்ததை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உடனடியாக பள்ளிப்பட்டு காவல்துறையினரிடம் காவலன் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று சென்னை எர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள பாரதிநகர் எனுமிடத்தில் பழனியப்பன் என்பவர் போலி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். தகவலறிந்த சுகாதாரமாக குழுவினர் விசாரணை நடத்தியதில் பழனியப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. உடனடியாக பழனியப்பனை கைது செய்து திருப்பாலைவனம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒரே நாளில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.