சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க.
சித்தர்களை தரிசிக்க ஆசையா? இந்த எளிய பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்!!!
இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. சித்தர்களை சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் நம்முடைய முன்னோர்கள் சித்தர்களை தரிசனம் செய்வதற்காக ஒரு பயிற்சியை நமக்கு சொல்லிவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .
பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும்.
ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு,
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.
ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் , உங்களுக்குமனபலம் கூடும்.
இந்த பயிற்சியை மேற்கொண்டால் 90 நாட்களுக்குள் ஒரு சித்தரின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.