கோப்பையை வென்ற கையோடு தமிழ் நடிகைக்கு தாலி கட்டி மனைவியாக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! யார் தெரியுமா?

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஷ்ரிதா செட்டியை இன்று திருமணம் செய்து கொண்டார்.


இந்திய அணியின் முன்னணி இளம் கிரிக்கெட் வீரர்களில் மணிஷ் பாண்டேவும் ஒருவராவார். இவர் தற்போது நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி தொடரில் கர்நாடக அணிக்கு கேப்டனாக செயல்பட்டு நேற்று நடைபெற்ற பைனலில் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றினார். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே உதயம் NH4 மற்றும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அஷ்ரிதா செட்டியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் தென்னிந்திய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற பிறகு பேட்டியில் பேசிய மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக வரவுள்ள தொடர்களில் நான் பங்கேற்பதில் மிகவும் ஆவலாக உள்ளேன்.

ஆனால் அதற்கு முன் வேறு முக்கிய தொடர் உள்ளது. அது என்னவென்றால் நான் நாளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அதிரடியாக அவர் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.