பட்டப் பகல்..! பலர் முன்னிலையில் உட்கார்ந்து கொண்டே சிறுநீர் கழித்த ஆண்! விமான நிலைய பரபரப்பு!

விமான நிலையத்திலேயே ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது விமான நிலையத்தில் பயணிகளின் நடுவிலே ஆணொருவர் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் திடீரென்று தான் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்தே சிறுநீர் கழிக்கின்றார்.  

இது அங்குள்ள பயணிகளுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், அவர்கள் பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை. சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது வரை அந்த வீடியோவை கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்துள்ளனர். பலரும் பல்வேறு கோணங்களில் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.  

அதாவது சிலர், "இத்தகைய ஆனால் நாகரிக செயல்களுக்கு பிறகும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கேட்டுள்ளனர். மற்ற சிலர் "அவருடைய இயலாமையை தண்டிக்க வேண்டிய அவசியமில்லை. அவரை சற்று நிம்மதியாக இருக்க விடுங்கள்" என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வீடியோவானது நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.