திடீரென அலறிய மகள்..! ஓடோடிச் சென்ற தந்தை..! அங்கு அவர் கண்ட காட்சி! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

அமெரிக்காவில் இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் மிரட்டிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணம் அமைந்துள்ளது. இங்கு டெரிக் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகளின் பெயர் ஏவா. ஏவாவின் வயது 11. ஏவா திடீரென்று கத்துவது போன்று அவருடைய தந்தையான டெரிக்குக்கு கேட்டுள்ளது. 

உடனடியாக டெரிக் அந்த மர்ம நபரை துரத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். உடனடியாக டெரிக் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

தவறான பதிவுகளை ஆய்வு செய்ததில் ஸ்டீஃபன் ஹாஸுகுல்கும் என்ற 21 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. 

அதாவது, ஸ்டீஃபன் அங்கு திருட வந்ததாக கூறியுள்ளார். அப்போது ஏவாவை கண்டவுடன் அவரை அருகிலுள்ள அறைக்குள் தள்ளிவிட்டு மிரட்டியுள்ளார். ஏவா பயந்து அலறியதை கேட்டவுடன் அவருடைய தந்தை அலறியடித்து சென்றுள்ளார். அப்போது ஸ்டீஃபன் அங்கிருந்து பக்கத்து வீட்டில் திருடுவதற்காக முயன்றுள்ளார்.

அப்போது அந்த பெண் காவல் அலாரதத்தை அமுக்கியதால் ஸ்டீஃபன் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.