குட்டி மலைப்பாம்பிடம் சில்மிஷம்..! உதட்டு முத்தம் ட்ரை பண்ணிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி வீடியோ!

முத்தம் கொடுக்க முயன்ற சிறுவனை கொட்டிய சம்பவமானது  இந்தோனேஷியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தோனேசியா நாட்டில் மகாஃசெப் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு இளைஞர்கள் சிலர் மலைப்பாம்பை பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறுவன் மலைப்பாம்புக்கு முத்தம் கொடுப்பதற்காக தயாராகி கொண்டிருந்தான். இன்னொரு இளைஞன் மலைப்பாம்பை அவனுடைய வாய்க்கருகே எடுத்து சென்றான். அப்போது எதிர்பாராவிதமாக மலைப்பாம்பு அவனுடைய மேலுதட்டை தீண்டியது. அந்த இளைஞன் வலியால் துடித்து அழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றன.

மேலும், இன்னொரு இளைஞன் எப்படியோ அந்த பாம்பிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு விடுகிறான். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.