மயங்க வைத்தார்! செ*ஸியாக பேச வைத்தார்! தொடக் கூடாத இடத்தில் தொட்டார்! கணவனின் மாமாவை தீர்த்துக் கட்டிய மனைவி கொடுத்த பகீர் வாக்குமூலம்!

தேநீரில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணை ஆபாசமாக பேச வைத்த நபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தேனி மாவட்டத்தில் வேப்பம்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பாண்டீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 30. இவருடைய மனைவியின் பெயர் நிரஞ்சனா. நிரஞ்சனாவின் வயது 23. இந்நிலையில் பாண்டீஸ்வரனின் சகோதரியின் பெயர் ராஜேஸ்வரி.  ராஜேஸ்வரியின் கணவரின் பெயர் மணிகண்டன். மணிகண்டன் அப்பகுதியில் வாழை இலை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டனுக்கும் நிரஞ்சனாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களில் தனியாக பேசி வந்துள்ளனர். இந்த சம்பவமானது பாண்டிஸ்வரனுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இறுதியில் மணிகண்டன் உடனான தொடர்பை நிரஞ்சனா நீக்கியுள்ளார்.

அதன்பின்னர் திடீரென்று ஒருநாள் மணிகண்டன் நிரஞ்சனாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தேநீரில் மயக்க மாத்திரையை கலந்துள்ளார். அதன்பின்னர் நிரஞ்சனாவிடம் ஆபாசமாக பேசி, அவளின் அந்தரங்கத்தை மனதிலிருந்து வெளியே எடுத்துள்ளார். 

இதனை ஆடியோவாக பதிவு செய்த மணிகண்டன் தினமும் நிரஞ்சனாவிற்கு செல்போன் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த பாண்டீஸ்வரன் மீண்டும் தன் மனைவி மீது அளவற்ற கோபம் அடைந்துள்ளார்.

உண்மையை புரிய வைப்பதற்காக நிரஞ்சனா பாண்டீஸ்வரனை அழைத்துக்கொண்டு மணிகண்டனை பார்ப்பதற்காக புறப்பட்டுள்ளார். பார்த்தவுடன் இருவரும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மணிகண்டன் நிரஞ்சனா மீது அவதூறுகளை கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிரஞ்சனா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அதன் பின்னர் அவருடைய மனைவி ராஜேஸ்வரி யையும் நிரஞ்சனா பலமாக வெட்டியுள்ளார் மணிகண்டன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். ராஜேஸ்வரிக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காவல்துறையினர் பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது தேனியின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.