சுர்ஜித்தின் சவப்பெட்டிக்கு அருகில் நின்று செல்ஃபி! துக்கத்தில் இருந்தவர்களை கொந்தளிக்க வைத்த இளைஞர்! யார் தெரியுமா?

2 வயது குழந்தையான சுர்ஜித் சிறந்த சவப்பெட்டி கருவி இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழுயிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் ஆய்வு செய்த போது சுர்ஜித் உடல் சிதைந்து இறந்து கிடந்ததை கண்டறிந்தனர். சுர்ஜித்தின் உடலை மீட்டவுடன் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுர்ஜித் சிதைந்த உடலை கண்ட அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி கண்களில் கண்ணீர் வழிய செய்தது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பாத்திமாபுதூர்  என்ற கிராமத்தில் இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

சவக்குழிக்குள் சர்ஜித்தின் சவப்பெட்டியை வைத்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் தன்னுடைய செல்ஃபோனில் செல்பி எடுத்து கொண்டிருந்தார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த சிலர், " 2 வயது குழந்தை இறந்து போனதற்கு கவலைப்படாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இதுபோன்ற மனித நேயமற்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம்" என்று சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அந்த நபர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் செல்பி எடுக்கவில்லை என்றும், சவப்பெட்டியை தான் புகைப்படமாக எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் பார்க்க அவர் செல்பி எடுப்பது போலத்தான் உள்ளது.