கண்ணில் பார்க்கும் பெண்களை எல்லாம் கொலை! அதிர வைத்த கொடூரன்! பதற வைக்கும் காரணம்!

அமெரிக்கா நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் கிறிஸ்டோபர் கிளேரி என்பவர் பல ஆண்டுகளாக பெண்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளார்.


கிறிஸ்டோபர் கிளேரி என்பவர் அமெரிக்க வாழ் இளைஞர் ஆவார். 27 வயது மிக்க இந்த இளைஞர்  பெண் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர. விசாரணையில் அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. பெண்கள் மீது உள்ள வெறுப்பின் காரணமாக சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் " நான் பொது இடத்தில் சுட்டு தள்ளப்போகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கிறிஸ்டோபர் கடந்த 2015 -ஆம் ஆண்டு, தன் காதலை நிராகரித்த பெண் ஒருவருக்கு குறுஞ் செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில் "என்னிடம் அதிக அளவில் துப்பாக்கிகள் உள்ளன, அதை வைத்து  உன்னை ஒரே நொடியில் என்னால் சுட்டு வீழ்த்த முடியும்" என்று அனுப்பியுள்ளார். பெண்கள் தன்னை தொடர்ந்து நிராகரித்த காரணத்தினால கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் சுட முடிவு செய்ததாக கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளான். 

பெண்கள் மீது சுட்டு தள்ளும் அளவிற்கு இவருக்கு கோபம் மற்றும் வெறுப்பு வர காரணம் என்ன  என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையின் போது பேசிய கிறிஸ்டோபர், "தனக்கு 27 வயது ஆகிறது, இது வரை எனக்கு ஒரு கேர்ள் பிரின்ட் கூட கிடையாது.  இது வரை நான் எந்த பெண்ணுடனும் பழகியதும் இல்லை, இன்று வரை நான் விர்ஜினாக தான் உள்ளேன்"  என்று கூறியுள்ளார். 

மேலும் "எனக்கு வாழ்க்கையில் தேவையானது அன்பு ஒன்றுதான். நான் பல பெண்களிடம் என் அன்பை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் அவர்கள் அனைவருமே என்னை மிகவும் புண்படுத்தி உதாசீன படுத்திவிட்டனர். இதுவே இந்த விபரீத முடிவிற்கு என்னை தள்ளியது,  என்று மிகுந்த உருக்கத்துடன் கூறியுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டின் ஜான்சன் பேசும் போது, "கிறிஸ்டோபர் அன்பிற்காக மனதளவில் ஏங்கிவருவது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் அவர் இந்த குற்ற செயலில் பல முறை ஈடுபட்டுள்ளார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதனை கருத்தில் கொண்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்" என்று தீர்ப்பு அளித்தார்.  

இவர் ஏற்கனவே காவல்துறையினரிடம் 2 முறை சிக்கி உள்ளார். பின்னர் காவல்துறையினரிடம் மன்றாடி வெளியே வந்தார். ஆனால் தற்போது அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி கிறிஸ்டின் ஜான்சன் அளித்த தீர்ப்பின்படி அவர் முழுமையாக தண்டனையை அனுபவித்ததாக வேண்டும்.