தீராத வயிற்று வலியால் துடித்த இளைஞன்..! 10 மருத்துவர்கள் சேர்ந்து செய்த அறுவை சிகிச்சை..! வயிற்றுக்குள் இருந்த 13 கிலோ கட்டி..!

சிறுவயதிலிருந்து வயிற்றுவலியால் அவதியுற்ற இளைஞர் வயிற்றிலிருந்து 13 கிலோ கட்டி அகற்றப்பட்டுள்ள சம்பவமானது சீனா நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சீனா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதிலிருந்தே வயிற்றுவலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் அவருடைய உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமுமில்லாமல் இருந்தது‌. இந்நிலையில் அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருடைய வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். ஸ்கேனில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அந்த இளைஞரின் வயிற்றுப்பகுதியில் வரலாற்றிலேயே பார்த்திராத அளவிற்கு பெரிய கட்டியிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டுமென்று மருத்துவர்கள் அந்த இளைஞருக்கு அறிவுரை அளித்துள்ளனர்.

அதன்படி 10 பேர் கொண்ட மருத்துவக்குழு அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தயாரானது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அந்த இளைஞரின் வயிற்றிலிருந்து 13 கிலோ கட்டி வெளியே எடுக்கப்பட்டது. வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு அந்த இளைஞரின் வயிற்றிலிருந்து கட்டி எடுக்கப்பட்ட செய்தியானது சீனா நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.