பட்டப் பகல்..! வெட்ட வெளி..! அம்பத்தூர் சூப்பர் மார்கெட்டில் டிப்டாப் ஆசாமி செய்த செயல்! அதிர்ச்சியில் கடை ஓனர்!

விளையாட்டுப் பொருள் கடை உரிமையாளரின் செல்போன் திருடப்பட்ட சம்பவமானது அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அம்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகே எஸ்பீ என்ற விளையாட்டு பொருள் விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளரின் பெயர் நிஷாருதின். இந்த கடையில் 6-ஆம் தேதி காலையில் நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விளையாட்டு பொருள் வாங்குவதற்காக வந்திருந்தார். 

அப்போது அந்த நபர் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தார் உரிமையாளரின் "சாம்சங் கே நோட் 7" மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். காணாமல் போன சில மணி நேரத்திற்கு பிறகுதான் நிஷாருதினுக்கு செல்போன் திருடப்பட்ட சம்பவமானது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்டுள்ளார். சிசிடிவி கேமரா பதிவுகளின் ஆதாரங்களுடன் நிஷாருதின் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.