டிவியில் சேனலை மாத்திய மனைவி! ஆத்திரத்தில் கத்தியால் குத்திய கணவன்!

தொலைக்காட்சி சேனலை மாற்றுவதில் கணவன் மனைவிக்குள் வாய் தகராறு ஏற்பட்டவே, குடிபோதையில் இருந்த கணவன் காய் நறுக்கும் கத்தியால் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.


திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த உஷா 7.3.19 அன்று இரவு 22.00 மணி அளவில் வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற மீன்பிடி தொழில் செய்யும் அவரது கணவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து டிவியில் பழைய பாடல்கள் கேட்டு உள்ளார்.

இந்நிலையில் ஜெபம் முடித்து வந்த உஷா சேனலை மாற்றச் சொல்லி உள்ளார். சேனலை மாற்ற மறுத்து கணவன் மனைவிக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.அப்போது மனைவி சேனலை மாற்றவே குடிபோதையில் இருந்த கணவன் காய் நறுக்கும் கத்தியால் மனைவியின் இரண்டு கையிலும் அறுத்தும், இடது பக்க மார்பில் குத்தியும் உள்ளார் .

இதனை சற்றும் எதிர்பாராத மனைவி இரத்த வெள்ளத்தில் அலறி கீழே விழுந்துள்ளார்.அவரை அருகில் வசிப்பவர்கள் GR H மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துவருகின்றனர்.