பேருந்துடன் அதிவேக ரேஸ்! வழுக்கி சக்கரத்திற்குள் விழுந்த கோரம்! மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் வழுக்கி விழுந்துஅரசு பேருந்து சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே கொண்டையம்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் பெங்களூரு நகரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

சில வாரங்களுக்கு முன்னர் இவர் கொண்டையம்பாளையத்திற்கு வந்துள்ளார். தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்து கொண்டிருந்தார். 11-ஆம் தேதியன்று இவர் டி.ஜி.புதூர் என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார். அங்கிருந்து கிளம்ப கெம்பநாயக்கன்பாளையம் பகுதியின் வழியாக வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்த ஒரு வளைவில் முருகேசன் வேகமாக சென்று கொண்டிருந்தார். உடன் சென்ற பேருந்தை போட்டி போட்டு முந்த முயன்றார். இதனால் வாகனம் தரையில் வழுக்கி முருகேசன் கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்தின் சக்கரங்களில் முருகேசன் சிக்கி கொண்டு உயிரிழந்தார்.

அப்பகுதி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக முருகேசன் என்பது பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவிலிருந்து விபத்து ஏற்பட்டபோது நிகழ்ந்தவற்றை வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவமானது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.