நீ குளிப்பதை படம் எடுத்துள்ளேன்! நண்பனின் மனைவியை மிரட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!

நண்பனின் மனைவியை ஆபாசமாக புகைப்படமெடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த காமக்கொடூரனை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சி மாவட்டத்தில் நெகமம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள ஆவலன்பட்டி என்ற இடத்திற்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரஞ்சிதாவின் வயது 38. இ

இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மணிகண்டன் சுப்பிரமணியத்தின் நண்பரானார். மணிகண்டனின் மனைவியின் பெயர் சந்தியா. நண்பராக அறிமுகமாகிய பின்னர் பல முறை மணிகண்டன் சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருடைய மனைவி ரஞ்சிதாவை பார்த்து மணிகண்டனுக்கும் காம எண்ணங்கள் வளர்ந்தன. ரஞ்சிதா குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் தன் மொபைலில் போட்டோக்களை எடுத்துள்ளார். பலமுறை ரஞ்சிதாவிற்கு பாலியல் தொந்தரவுகளை அளித்து வந்துள்ளார். ரஞ்சிதா மணிகண்டனின் சபலத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை.

சில தினங்கள் முன்னர் சுப்பிரமணியன் வேலைக்கு சென்றவுடன் மணிகண்டன் ரஞ்சிதாவை காண வந்துள்ளார். ரஞ்சிதாவிடம் அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக மிரட்டியுள்ளார். தன்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

மணிகண்டனின் தகாத செயல்களை அவருடைய மனைவியிடம் ரஞ்சிதா கூறியுள்ளார். ஆனால் சந்தியா மணிகண்டனை கண்டிக்காமல் அவரை ஆதரித்து வந்துள்ளார்‌. பின்னர் செய்வதறியாது தன் கணவர் சுப்பிரமணியிடம் நிகழ்ந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இருவரும் நெகமம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள சந்தியாவை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது பொள்ளாச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.